மாதரே மாதரே
மகனின் பசியைப் பல மைல்கள்
தூரத்தில் கூட
அறியும் அன்பான ,
அழகான
அம்மாவாக ,
பார்வை இழந்த போதும்
பரவசத்தோடு பேரனை
பார்த்துக்கொள்ளும்
பாட்டியாக ,
அன்பைக் கூட அதட்டியும்
அடித்துச் சொல்லும்
அக்காவாக ,
தன்னிகரில்லா பாசத்தை
அள்ளிக் கொடுக்கும் அன்பு
தங்கையாக ,
கெட்டதை விட்டுவிட்டு நல்லதை
மட்டுமே நன்றாக
சொல்லிக்கொடுக்கும் நல்ல
நண்பியாக ,
கனவுகளை நனவாக்கும் வகையில்
கண்ணைக் காக்கும்
இமையைப்போல் அமையும்
காதலியாக ,
கள்வனை கண்ணியமான
கணவனாக மாற்றக்கூடிய
சக்தி படைத்த
மனைவியாக ,
மூத்தோர் சொல் கேட்காதவனை கூட
முட்டிப் போட வைக்கும்
மகளாக ,
மீண்டும் குழந்தைப் பருவத்திற்கே
கூட்டிச் செல்லும் குறும்புக்கார
பேத்தியாக ,
இப்படி ஒவ்வொரு ஆணின் வாழ்வை
முழுமைப் படுத்தும் பெண்களுக்கு ,
இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்...
உனக்கு முதல் குழந்தையாக நான் இருக்கலாம் ,
ஆனால் எனக்கு முதல் தெய்வம் நீ மட்டுமே ...
Comments
Post a Comment